சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தலைமையில் கூடிய நிலையில் இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை அவர் சபைக்கு அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீக்கிக் கொள்வதாக மனுதாரர்கள் வேண்டிய கோரிக்கைகக்கு ஏற்ப மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.