பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், சத்தியாகிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கறுப்பு உடையடைந்து கறுப்புக் கொடிகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்று வரும் நிலையில், துணை வேந்தர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு எவ்வித தகவல்களையும் தமது சார்பில் வெளியிடவில்லை என்பதை கண்டித்து, இந்த கறுப்புக்கொடி போராட்டத்தினை நடாத்திவருகின்றனர்.
பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வீதி ஓரங்களில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததோடு, துணைவேந்தர்கள் வருகை தந்த போது வரிசையாக நின்று தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.