வவுனியாவில் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லை, உரிய விலைக்குச் சந்தைப்படுத்த முடியாது விவசாயிகள் அவதியுறுகின்றனர். கொக்குவெளி, பேயாடிகூழாங்குளம்,ஒயார்சின்னக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், சிறுபோக நெல் விதைப்பில் ஈடுபட்டனர். 40 ஆயிரம் ரூபாவிற்கு இரசாயன உரத்தைக் கொள்வனவு செய்து, நெற் செய்கையினை முன்னெடுத்த போதிலும், தற்போது உரிய விலைக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாது விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெல்லை மூடைகட்டுவதற்கு பைகளைப் பெற்றுக்கொள்ளவும் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். நெல்லை விற்பனை செய்வதற்காக ஆலைகளுக்கு எடுத்துச் சென்றால், ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்ய மறுப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.