வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு !

0
138
அம்பாறை – பெரிய நீலாவணையில் நேற்று(17) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுவனொருவனும் இளைஞரொருவரும் உயிரிழந்துள்ளனர்.
பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்திலிருந்து சரஸ்வதி வித்தியாலய வீதியால் கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களே விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கனரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 14 வயது சிறுவனும் 18 வயதான இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.விபத்திற்குள்ளாகிய இருவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.