வாகன விபத்துக்களில் 8 பேர் பலி!

0
173

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற எட்டு வீதி விபத்துக்களில் 11 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டானை, கதிரான பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, தலுகான – மஹியங்கனை வீதியில் பந்தனாகல சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அவிசாவளை – ஹட்டன் வீதியில் தெஹியோவிட்ட அல்கொட வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நாரம்மல – குளியாபிட்டிய வீதியில் ஹொரொம்பாவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 69 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, காலி – மாத்தறை பிரதான வீதியின் யத்தெஹிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பிங்கிரிய – தும்மலசூரிய வீதியில் கந்துருவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை தெஹியத்தகண்டி – மஹியங்கனை வீதியில் நாகஸ்வௌ சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 34 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை – அம்பேபுஸ்ஸ வீதியில் மொல்லிப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.