வாட்டிவதைக்கும் வெப்பநிலை குறையும்: வானிலை ஆய்வு மையம்

0
65
தென்மேற்குப் பருவமழை மே 20க்குப் பிறகு எதிர்பார்க்கப் படுவதால் ‘எச்சரிக்கை நிலைக்கு’ உயர்ந்துள்ள வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பெய்யும் என அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, பிற்பகல் 1 மணிக்குப் பிறகு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.இதன்படி, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதிக அபாய மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.