வாளுடன் இளைஞர் ஒருவர் கைது…!

0
68

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் கைது நேற்று செய்யப்பட்டுள்ளார்.


பலவேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபர் வௌ;வேறு இடங்களில் தலைமறைவாக இருந்து வந்ததாகவும் நேற்று அவரது தாயரின் வீட்டிற்கு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிசார், சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.