மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலையின் செயற்பாடுகள் குறித்து கண்டறிவதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று விசேட விஜயம் செய்தது.
இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜிதஹேரத் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலர் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் பிரதம இணைப்பாளர் சுதத் லியனகே இயந்திரங்களின் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
1975 ஆம் ஆண்டுகாலப்பபகுதில் சுமார் நான்காயிரம் ஊழியர்கள் பணிபுரிந்த வாழைச்சேனை கடதாசி ஆலை, கடந்த பல வருடகாலமாக மூடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது 85 ஊழியர்களை கொண்டு மீள்இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதகாலத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த ஆலையில் ஒரு மாத்திற்கு அறுநூறு தொன் கடதாசியை உற்பத்தி முடியுமாக இருந்தபோதிலும் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சந்தைக்கு அனுப்பமுடியாமை போன்ற காரணங்களினால் உற்பத்தியை அதிகரிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.