வாழ்க்கைத்திறன் விருத்தி மற்றும் உளவளத்துணை பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்

0
50

வாழ்க்கைத் திறன் விருத்தி மற்றும் உள வளத்துணை பாட நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு காத்தான்குடி
பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளர் உதயசிறீதர் தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி பிரிவால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான காத்தான்குடி பிரதேச மட்ட வலையமைப்புக்குழு மற்றும் உள சமூக சம்மேளனம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான மகளிர் ஒன்றியத்தின் தலைவி திருமதி அனீசா பிர்தௌஸ் உட்பட பல் வேறு துறை சார்ந்த அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.