நாட்டுக்கு வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (22) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குருநாகலைச் சேர்ந்த 41 வயது வர்த்தகர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்றையதினம் 11.00 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-648 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப்பையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா மதிப்புடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 10,000 ”பிளாட்டினம்” சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட் கார்டூன்கள் விமான நிலைய பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.