28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 15 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 6 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தோடு 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டார்.

-இந்த நிலையில் குறித்த 15 பேரூம் இன்றைய தினம் வியாழக்கிழமை(17) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

-விளக்கமறியலில் வைக்கப்பட்ட 14 இந்திய மீனவர்களும்,சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்ட 14 வயது சிறுவனும், இவ்வாறு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.

-இந்த நிலையில் குறித்த 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

-மேலும் படகு ஒன்றின் உரிமையாளர் இன்றைய தினம்(17) சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது படகை விடுவிக்க கோரி சட்டத்தரணி ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

-இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டதோடு,குறித்த விசாரணை யை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles