சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிராக, மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, கொழும்பு நோக்கித் துவிச்சக்கர வண்டிப் பயணத்தை, வெற்றிகரமாக முன்னெடுத்த மாணவிக்கு, காத்தான்குடியில் நேற்று மாலை கௌரமளிக்கப்பட்டது.
காத்தான்குடி எல்வையிலுள்ள நுழைவாயிலில் வைத்து மாணவியை குடும்ப உறவினர்கள் கண்ணீர் மல்க மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதன் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் மாணவியை கௌரவித்தனர்.
காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா எனும் மாணவி கடந்த திங்கட்கிழமை இவ் விழிப்புணர்வுப் பயணத்தை
காத்தான்குடியிலிருந்து ஆரம்பித்திருந்தார். பிரதமரை சந்தித்து மகஜரொன்றையும் அவர் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.