விவசாய ஏற்றுமதிகளால் நாட்டிற்கு அதிக வருமானம்

0
67

தற்போது பெருந்தோட்டப் பயிர் அல்லாமல் ஊடுபயிராகப் பயிரிடப்பட்டு வரும் பேரீச்சம்பழ செய்கையை ஏற்றுமதிப் பயிராக பிரபலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்றுமதி விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி 17 இலட்சம் செவ்வாழைக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக 37.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படடுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது, இலங்கையில் பேரீச்சம் பழச் செய்கை 13,000 ஹெக்டேர்களில் பயிரிடப்பட்டுள்ளதுடன், உள்ளூர் பேரீச்சம்பழ வகைகளைத் தவிர, ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு 1000 பழங்களை அறுவடை செய்யக்கூடிய பல வகை பேரீச்சம்பழங்களை விவசாய அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளன.

தேங்காய் ஏற்றுமதியின் மூலம் மாதாந்தம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டும் நாடு தற்போது வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டுகிறது.

2021ஆம் ஆண்டில் இலங்கையில் 23,890 மெற்றிக்தொன் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் 2022ஆம் ஆண்டில் 24,323 மெட்ரிக் தொன் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டு 34,771 மெட்ரிக் தொன் ஏற்றுமதி மூலம் 86,680 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.