வீதியில் கவிழ்ந்த பஸ் : 23 பேர் காயம் ! மூவரின் நிலை கவலைக்கிடம் !

0
126

வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் எதிர் திசையில் சீமெந்து கொண்டு சென்ற கனரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.
கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.