வீதியோரத்தில் மட்பாண்டங்களை விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரி விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

0
39

குருணாகல் – புத்தளம் வீதியில் வாரியப்பொல, பம்பரகம்மன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் ஒன்று வீதியோரத்தில் மட்பாண்டங்களை விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரி ஒருவர் மீது மோதி பின்னர் அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வியாபாரி வாரியப்பொல வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வாரியப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடையவர் ஆவார். 

இதனையடுத்து பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.