28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெற்றுக் காசோலை அரசியல்?

ஜனாதிபதி தேர்தல் இன்னும் அதிகம் சூடு பிடிக்கவில்லை – காரணம், பிரதான வேட்பாளர்கள் மத்தியில், எதிர்பார்ப்புடன் நோக்கப்படும் ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
தெளிவற்ற வகையில் – ஆனால், தான் ஏன் உங்களுக்கு தேவை. என்ற வாறான கதைகளையே அவ்வப்போது கூறிவருகின்றார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்னிலங்கை அரசியலில் சூழலில், எதிர் பாராத கூட்டுக்கள் ஏற்படலாம் என்னும், எதிர்வுகூறல்கள் நிலவுகின்ற போதிலும் கூட, அதற்கான நம்பிக்கையான அரசியல் அறிகுறியை இன்னும் காணமுடியவில்லை. இந்த நிலையில் ரணிலின் நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பதை ஊகிப்பது கடினமாகவே இருக்கின்றது. ரணிலின் வெற்றி என்பது, ரணிலின் வியூகங்களில் மட்டுமே தங்கியிருக்கின்றது.
ஏனெனில் ரணிலின் வெற்றிக்காக எந்தவொரு வெளித்தரப்பும் மல்லுக்கட்டப் போவதில்லை ஏனெனில், ரணில் அவரது ஆகக் கூடிய வாக்கு பலத்தை நிரூபிக்காத வரையில், அவரை நோக்கி எந்தளவிற்கு மற்றவர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது சந்தேகமே! இவ்வாறானதொரு பின்புலத்தில் சஜித் பிரேமதாச, ஒப்பீட்டடிப்படை யில் அதிக நம்பிக்கையோடு இருப்பதாகவே தெரிகின்றது.
காரணம், சஜித் தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கே அதிகம் கிடைக்குமென்று நம்புகின்றார். தற்போதுள்ள சூழலில், 2015இல் காணப்பட்டது போன்ற தொரு நிலைமையே காணப்படுகின்றது. மும்முனை போட்டி இடம் பெற்றால் – தற்போதுள்ள நிலையில் எவருமே ஜம்பது விகிதத்தை பெறப் போவதில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளாக மாறக் கூடிய வாய்ப்பு அதிகமுண்டு.
2015 நிலை மையை விடவும் தமிழ் மக்களின் வாக்குகள் அதிக முக்கித்துவமுடைய தாக இருக்கின்றது. ஏனெனில் 2015இல் தற்போது காணப்படுவது போன்றதொரு தீவிரமான மும்முனை போட்டி இடம்பெறவில்லை.
அதேவேளை, அன்றைய சூழலில், ஜே.வி.பி ஓர் அரசியல் சக்தியாகவும் இருந்திருக்கவில்லை. ஜே.வி.பி தொடர்பில் எவருமே சிந்திக்கக் கூடிய நிலையில் கூட இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நிலைமைகள் தலைகீழாக மாறியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில்தான், கடந்த காலத்தில் இடம்பெற்றதை போன்று, ஈழத் தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றுக் காசோலையாக பயன்படுத்துவதா என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழ் தேசிய தலைமைகள் என்போர், 2015இல், மைத்திரிபாலவிடம் அப்படியானதொரு காசோலையையே வழங்கியிருந்தனர். அன்று தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை வெற்றுக் காசோலையாக தாரைவார்த்த சம்பந்தன் தரப்பு, மீண்டும் அதனை செய்ய வேண்டும் என்பதற்காகவே, மல்லுக்கட்டு கின்றது. யுத்தம் முடிவுற்று பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, கடந்த காலத்திலிருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத சம்பந்தன் – சுமந்திரன் அணி, மீண்டும் தங்களின் சுய இச்சைக்குட்பட்ட வகையிலேயே, தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க முற்படுகின்றது. இவ்வா றானதொரு பின்புலத்தில்தான், தற்போதைய அரசியல் சூழலிலுள்ள பல்வேறு சிக்கல்களையும், தமிழினம் எதிர்கொண்டுள்ள சவால்களையும் புரிந்து கொண்டிருக்கும், அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக் களும் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நோக்கி, தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திவருகின்றன.
அந்த அடிப்படையில் செயலாற்றிவருகின்றன. தமிழ் மக்கள் எவருக்குமான வெற்றுக் காசோலையாக இருக்க முடி யாது. இதனை புரிந்து கொண்டால், அதற்கான மாற்றுவழி தொடர்பில் ஆராய வேண்டும். மாற்றுவழி தொடர்பில் ஆராய்ந்தால், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துதை தவிர, வேறு என்ன தெரிவு உண்டு?

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles