வெள்ளவத்தை கடற்கரை வீதியில் உஸ்பெகிஸ்தான் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை கான்ஸ்டபிள் குணவர்தன மற்றும் அவரது உஸ்பெகிஸ்தான் காதலியான நிக்கி குத்யா ஆகியோரே காயமடைந்துள்ளனர்.காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காவலர் தனது காதலியுடன் கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அலெக்ஸாண்ட்ரா பக்க சாலை சந்திப்பு அருகே முச்சக்கரவண்டியில் விபத்து இடம்பெற்றமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.