நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை (16) மற்றும் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
யக்கலமுல்ல, அகுரெஸ்ஸ வீதியில் பெலென்கஸ்ஹேன பிரதேசத்தில் யக்கலமுல்லயிலிருந்து கராகொட நோக்கி சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வாகன சாரதி, குழந்தையொன்று உட்பட இரண்டு பெண்கள் காயமடைந்ததில் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் கல்முல்ல, யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.
இதேவேளை கொட்டதெனிய, மெல்லவகெதர பன்னல வீதி, மானிங்கமுவ பிரதேசம், மெல்லவகெதரயிலிருந்து பன்னல நோக்கி சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றில் மோதியுள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திவுலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடையவர் ஆவார்.
அத்துடன், நாகொடை, பத்தேகம, கெப்பெட்டியகொட பகுதியில், பத்தேகமயிலிருந்து நாகொடை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாடு ஒன்றில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் நாகொடை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
குறித்த வாகன விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.