வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

0
120

அரச வைத்திய நிபுணர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வைத்திய நிபுணர்களின் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி 176 வைத்திய நிபுணர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.


மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் முன்னிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


வைத்திய நிபுணர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 இலிருந்து 63 ஆக திருத்த கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இருப்பினும் இது தொடர்பில் வைத்தியர்கள் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.