வைத்தியர் ஜலீலா முஸம்மில் எழுதிய ‘தூரிகை வரையும் மின்மினிகள்’ ஹைக்கூ கவிதைநூல் வெளியீடு

0
144

வைத்தியர் ஜலீலா முஸம்மில் எழுதிய ‘தூரிகை வரையும் மின்மினிகள்’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு நேற்று இரவு ஏறாவூர் வாவிக்கரையில்
அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர் நகர பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.எம். மஹ்பூழ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்,
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரி போதனாசிரியர் உட்பட பலரும் பங்கேற்றனர்.
நூல் நயந்துரையை ஓய்வு நிலை கோட்டக் கல்வி அதிகாரி எஸ். அப்துல் றஸாக் ஆற்றினார்.
நூல் ரசனையை, மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரி போதனாசிரியர் நிகழ்த்தினார்.
மருத்துவத் துறையில் வைத்திய அத்தியட்சகராகப் பணிபுரியும் ஜலீலா, இலக்கியத் துறையிலும் கூடுதலான ஈடுபாட்டுடன் பயணித்து வருகிறார்.
சுமார் 40இற்கு மேற்பட்ட இவரது மருத்துவ, இலக்கிய ஆக்கங்கள் இலங்கை இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில்
வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.