எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன்
இணைந்து இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இருவர் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.