நுவரெலியா ஹட்டனில் ஜும்ஆ பள்ளிவாயலில் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்த பின், அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றதாகச்
சந்தேகிக்கப்படும் நபரை, அம்பாறை சம்மாந்துறைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர்.
ஹட்டனில் ஜும்ஆப் பள்ளிவாயல் சம்பவம் கடந்த 9ம் திகதி அதிகாலை இடம்பெற்ற நிலையில், அங்கு பதிவாகிய சி.சி.ரிவி காணொளி மூலம்
சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டிருந்தார்.
சந்தேகநபரைக் கைது செய்ய ஹட்டன் பொலிஸார் முயற்சிகளை எடுத்திருந்த நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார்.
நேற்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்தின் வழிகாட்டலில், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஷ்கர் தலைமையிலான
பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்தனர்.
கைதானவருக்கு எதிராக, சாய்ந்தமருது,பொத்துவில்,ஹட்டன் ஆகிய பொலிஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை தொடர்பான முறைப்பாடுகள் உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.