30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

100ஆவது நாளை தாண்டிய இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 100ஆவது நாளை தாண்டியுள்ளது. தாக்குதலில் வடக்கு காஸா முழுவதும் நிர்மூலமாகிவிட்டது. அந்த பகுதி, இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய, தெற்கு காஸாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஏவுகணை, குண்டுகள் தொடர்ந்து வீசப்படு கின்றன. மேலும் தரை வழிதாக்குதல் நடந்து வருகிறது. இந்த போரில், காஸாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

காஸாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் அங்கு கடுமையான பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இஸ்ரேல் கருதாது. தெற்கு காஸாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற ஆயுதங்களும் தொடர்ந்து நுழைகிறது.எனவே அதை நிச்சயமாக நாங்கள் மூட வேண்டும்” என்றுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles