14 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியவர் வீதியில் விழுந்து மரணம்

0
202

புத்தளம் தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேர்விஸ் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் நிந்தனியைச் சேர்ந்த 55 வயது குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கெட்டிப்பொலவில், ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்த குடும்பஸ்தர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நேற்று தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீட்டுக்கு வருகை தந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்த நபர் கெட்டிப்பொலவில் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ் கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் வழங்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என புத்தளம் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

உயிரிழந்த நபரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.