15 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சட்டை பின்கள் இரண்டை விழுங்கியுள்ளார்.
இந்த சம்பவம் பொத்துப்பிட்டிய காவல் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, இரத்தினபுரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தன்னுடைய தவறான மனைவியின் மகளை, வன்புணர்விற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டிருந்த போதே சந்தேகநபர் பதற்றமடைந்து இவ்வாறு சட்டை பின்களை விழுங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.