15,000 மில்லியன் பெறுமதியான போதை பொருட்கள் பறிமுதல்

0
59

கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சுமார் 9,631 மில்லியன் ரூபா பெறுமதியான 385 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 162 பேர் கைதுசெய்யப்பட்டதோடு, 11 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.