ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 3 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தை கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக, மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.