28.7 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

’20’ ஐ விரைவில் நிறைவேற்றுவோம் – பங்காளிக் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிவிட வேண்டும். இந்தச் சட்ட வரைவை இழுத்தடிக்க நான் அனுமதி வழங்கமாட்டேன்” என திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

‘‘2021ஆம் ஆண்டு நவம்பர் எனது இரண்டாவது பதவியாண்டு நிறைவு தினத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு மற்றும் புதிய அரசமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய, அராஜகத்தை எதிர்க்கின்ற மற்றும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசமைப்புக்கான தேவையைத் தெளிவுபடுத்தினார். குறிப்பாக தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தால் தனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அதனால் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தனது இரண்டாவது பதவியாண்டு நிறைவு திகதியான எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பைச் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles