20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
குறித்த உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு கடந்த 10 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை அனுமதி பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானம் இன்று (20) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
அது தொடர்பான விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.