20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று மற்றும் நாளை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் விவதாம் நடைபெறவுள்ளதுடன் நாளை இரவு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல 5 மற்றும் 20 ஆம் சரத்துக்கனை நீக்கி கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு சரத்துக்களை திருத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் ஊாக முன்னெடுக்கப்படும் திருத்தங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பில் நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.