மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், இம்மாதம் ‘200ல் மலையகம் சாதனையை நோக்கி’ எனும் மாபெரும் நிகழ்வுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று மலையக மக்கள் முன்னணிக்கும் கொழும்பு வர்த்தகர்களுக்குமிடையில் இடம்பெற்றுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் வெளிநாட்டு விவகார செயலாளர் எச்.விக்ரமசிங்க ஏற்பாட்டில், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 200ல் மலையகம் சாதனையை நோக்கி எனும் நிகழ்வு எவ்வாறு நடைபெறப்போகின்றது, அந்நிகழ்வில் மலையகத்திலிருந்து கொழும்பில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களின் பங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உபதலைவர் முனைவர் சிவலிங்கம் சதீஸ்குமார் உட்பட கொழும்பு வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.