2023 இல் 150,000 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்

0
119

இந்த வருடத்தில் இதுவரை 150,000 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 300,000 பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புள்ளி விவரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவை மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.