2023 வரை ஆசிரிய இடமாற்ற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது

0
193

2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு கடந்த 31ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்தது.
இந்தநிலையில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களது இணக்கப்பாடு இருந்தால் மாத்திரமே, ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவையில் ஈடுபட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.