தற்போது எயிட்ஸ் நோயாளர்களின் பாதிப்பு முன்னூறு வீதத்தால் அதிகரித்துள்ளதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 0.03 எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்த எண்ணிக்கை பத்தில் ஒரு பங்காக அதாவது முந்நூறு சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் சுமார் 3,500 எய்ட்ஸ் நோயாளிகள்
மேலும், தற்போது நாடு முழுவதும் சுமார் 3,500 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதுமட்டுமன்றி கிட்டத்தட்ட 50 குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் STD மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரத்தின் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி நிபுணர் கூறினார்.
இலங்கையில் குறைந்தது ஐயாயிரம் நோயாளிகள்
கண்டறியப்பட்ட நோயாளர்களின் சதவீதத்தின்படி, இலங்கையில் குறைந்தது ஐயாயிரம் நோயாளிகள் இருக்க வேண்டும், இதனால் மருத்துவ நிலையங்களுக்கு வராத நோயாளிகள் நாடளாவிய ரீதியில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட நோயாளிகளில் ஏறக்குறைய எண்பத்தி ஒரு சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகிறார்கள் என்றும், எதிர்காலத்தில் இந்த நோயின் பரவல் அதிகரிக்கலாம்.