பல்கலைக்கழக புதிய கட்டிட திறப்பு விழாவினை நடாத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரின் அனுமதி கோரப்பட்டுள்ளது
இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக உதவிப் பதிவாளரினால் (கட்டடம்) பல்கலைக்கழக புதிய கட்டட திறப்புவிழா நிகழ்வினை சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பேணி நடாத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்க கோரி கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறப்பு விழா இடம்பெறவுள்ளது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவுக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ள நிலையில்
குறித்த நிகழ்வு தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார பிரிவினரோடோ அல்லது சுகாதார திணைக்களத்தினருடனோ கலந்தா லோசிக்காது மத்திய கல்வி அமைச்சினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எனினும் தற்போது நாட்டில் கொரோணா தாக்கம் நாடு பூராகவும் வலுவடைந்து வரும் நிலையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொற்று தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்விற்கு சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமை சமூக ஆர்வலர்களால் இந்த விடயம்தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டநிலையில்
இன்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் (கட்டடம்) அவர்களினால் குறித்த நிகழ்வினை சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பேணி நடாத்துவதற்கு தமக்கு அனுமதி கோரி கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் விண்ணப்பித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன