27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ்ப்பாணம் மீன் சந்தை வியாரிகளுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனயில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையை தொடர்ந்து திருகோணமலை மீன் சந்தைநியில் விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிகள் சிலரில் கொரோனா தொற்று இனம் கானப்பட்டதனாலும் நுகர்வோர் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்வதனை தடுக்கும் நோக்கிலுமே இன்றும் நாளையும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

குருநகர் , பாசையூர் , சின்னக்கடை , நாவாந்துறை , கல்வியங்காடு உள்ளிட்ட அங்காடிகளில் இருந்து குறிப்பிட்டளவு எண்டிக்கையானோருக்கு முதல் கட்டமாக இரு தாட்களும் இந்த பரிசோதனை இடம்பெறவுள்ளது. இவ்வாறு மேற்கொள்ளும் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டாள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தைகள் இயங்கும் .

இவ்வாறான பரிசோதனைகள் அடுத்த கட்டமாக மரக்கறி சந்தைகள் மீதும் தொடர்வது தொடர்பிலும் ஆராயப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles