3 நாட்களில் 7.5 மில்லியன் வருமானம் ஈட்டிக் கொடுத்த தாமரைக் கோபுரம்!

0
143

தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் தாமரைக் கோபுர நுழைவுச் சீட்டு விற்பனை வருமானம் மூலம் 7.5 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாக தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் கடந்த வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிலையில், தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 3 நாட்களில் சுமார் 14 ஆயிரம் பேர் தாமரைக் கோபுரத்தைப் பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளார்கள். மேலும் தாமரைக் கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை கோபுரத்தை மக்கள் பார்வையிடலாம். எவ்வாறாயினும் இரவு 10 மணி வரை மாத்திரமே பயணச் சீட்டுக்கள் வழங்கப்படும் என பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.