பாரிஸ் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்ககத்தை தட்டிச் சென்றார். இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீற்றர் தூரம் ஈட்டியெறிந்த அர்ஷத் நதீம் அனைவரையும் வியக்க வைத்தார்.
ஒலிம்பிக்கின் முந்தைய சாதனைகளை முறியடித்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தானிய தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
1984 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.