Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிறுவனம் உள்ளிட்ட 5 அரச நிறுவனங்களின் தலைவர்கள் இந்தவாரம் கோப் எனப்படும் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகிய நிறுவனங்களின் தலைவர்களே குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நாளையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதியும், ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிறுவனத்தின் தலைவர் எதிர்வரும் 26ஆம் திகதியும் கோப் எனப்படும் என அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.