லங்கா சதொச நிறுவனம் வெள்ளை சீனி, கோதுமை மா, டின் மீன், நெத்தலி மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, வெள்ளை சீனி கிலோகிராம் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 238 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 279 ரூபாவாகும். அதன் விலை 96 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் டின் மீன் (செமன்) ஒன்றின் விலை 105 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 585 ரூபாவாகும்.
சதொச ஊடாக ஒரு கிலோ நெத்தலியை 1300 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும். அவற்றின் விலை கிலோவொன்றுக்கு 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, 17 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள சிவப்பு பருப்பு கிலோ ஒன்றினை 398 ரூபாவுக்கு கொள்வனவு செய்யமுடியும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.