5% விவசாயிகள் மாத்திரமே MOP உரத்தை கொள்வனவு செய்துள்ளனர் -விவசாய அமைச்சு

0
119
கடந்த பெரும் போகத்தில் உரக் கொள்வனவுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தில் 5% விவசாயிகளே எம்ஓபி உரங்களை கொள்வனவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2022/23 பெரும் போகத்தில் MOP உரங்களை கொள்வனவு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியதுடன், கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் விவசாயிகளின் கணக்குகளிலேயே தொகை வரவு வைக்கப்பட்டது.
ஒரு ஹெக்டேருக்கு 10,000 ரூபா, 2 ஹெக்டேருக்கு 20,000 ரூபா என வழங்கப்பட்ட பணத்தில் 5% விவசாயிகள் மாத்திரமே எம்ஓபி உரங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.விவசாய அமைச்சு 36,000 மெட்ரிக் தொன் எம்ஓபி உரத்தை இறக்குமதி செய்த போதிலும், மொத்தத் தொகையில் 5 முதல் 9 வீதத்தையே விவசாயிகள் கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர்கள் உண்மைகளை முன்வைத்துள்ளனர்.