68 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தனிமைப் படுத் தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்னும் அமுல் உள்ளது.
நேற்றிரவு முதல் மேலும் நான்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாணந்துறை வடக்கு, பாணந்துறை தெற்கு, ஹோமாகம மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவு களிலும், கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவு களிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவு களிலும், களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவு களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.