73 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்

0
82

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 73 ஆயிரத்து 32 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 509 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 34ஆயிரத்து 700 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மாகாண ரீதியில் அதிகமாக மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேலும் நவம்பர் மாதத்தில் இதுவரை 4,539 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் தொடர் மழையினால் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.