8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்கவில் நால்வர் கைது!

0
12

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 8 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 35 வயதுடைய இருவரும், மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 28  வயதுடைய நபரும் இரத்தினபுரி, ரக்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரும் ஆவர்.

சந்தேக நபர்கள் நால்வரும் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த 15 பயணப்பொதிகளிலிருந்து 560,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 2,800 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ………