800 படத்தில் விஜய் சேதுபதி விலகியது வருத்தமளிக்கிறது, இருந்தாலும்.. நாமல் ராஜபக்ச ட்வீட்

0
78

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தான் 800. ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

எஸ் ஸ்ரீபதி இயக்கத்தில் நடிகர் மதுர் மிட்டல் நடித்திருக்கும் இப்படத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இதற்கு முன்பு முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் மகனும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் நாமல் ராஜபக்ச 800படத்தின் டிரெய்லர் முன்னோட்டத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் ‘இதில் விஜய் சேதுபதி நடிக்காதது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், படக்குழு திட்டமிட்டபடி படத்தை எடுத்துவிட்டனர்.

இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்க கூடிய சக்சஸ் ஸ்டோரி இது, 800 படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்’ என டுவிட் செய்துள்ளார்.