சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம்!

0
161

நாட்டில், பொருளாதாரப் பிரச்சினைகளைத் தணிக்கவும், நல்ல பொருளாதார நடைமுறைகளை ஏற்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான நோக்கத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு, கடன் நிலைத்தன்மை குறித்த உறுதியான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள, அண்மைக்கால அரசியல் ஸ்திரமின்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படாத, முன்னைய அரசாங்கத்தின் அரசியல் கொள்கை காரணமாக, இது தடைப்பட்டது.
தற்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அரசியல் ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வ கட்சி ஆட்சி அமைப்பதற்கான அரசியல் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன.
இவ்வாறான நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து, நிதி ஸ்திரத் தன்மையை உருவாக்க தேவையான முதல் படியை எடுக்க முடியும் என, அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.