எரிவாயுவுடன் மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வருகின்றது!

0
148

மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவுடன் கப்பல் ஒன்று நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு பகுதிகளில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான வரிசை முறை முடிவுக்கு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்திற்காக ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் 20 லட்சத்துக்கும் அதிகமான சமையல் எரிவாயு கொள்கலன்களை இந்த மாதம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்கு தொடர்ந்தும் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.