ஓமிக்ரோன் உப புறழ்வு வீரியம் கொண்டது : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

0
174

நாடு மீண்டுமொரு கொவிட் அலையை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. எனவே மீண்டுமொரு கொவிட் அலை உருவாகாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூறிய அவர், மக்கள் தமக்கான கொரோனா தடுப்பூசிகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
‘இனிவரும் காலங்களில் கொவிட் பரவல் அதிகரித்தாலும் முடக்க நிலைக்கு செல்ல முடியாது. இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளாந்தம் 150 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தற்போது இலங்கையில் புதிய ஓமிக்ரோன் உப புறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை பிறழ்வானது ஒருவரிடமிருந்து 12 பேருக்கு பரவும் திறனைக் கொண்டுள்ளது. அது முந்தைய டெல்டா வகைகள் மற்றும் சீனாவில் காணப்படும் உப பிறழ்வுகளை விட வீரியம் கொண்டது.
பரவி வரும் புதிய உபபிறழ்வினால் தொற்றாளர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இறப்பு வீதமும் அதிகரித்துள்ளது.
இதனை எதிர்கொள்ள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். எனவே மக்கள் தமக்கான கொரோனா தடுப்பூசிகளை தாமதமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும்’ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.