பொதுநலவாய விளையாட்டில் பங்கேற்கச் சென்ற இலங்கையர்கள் 10 பேர் மாயம்!

0
207

இங்கிலாந்து பேர்மிங்காமில் தங்கியுள்ள இலங்கையின் பொதுநலவாய விளையாட்டுக் குழுவின் பத்து உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான சந்தேகத்திற்குரிய முயற்சியின் கீழ் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது தடகள வீரர்களும் ஒரு மேலாளரும் தங்கள் நிகழ்வுகளை முடித்த பிறகு காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜூடோ வீராங்கனை சமிலா திலானி, அவரது முகாமையாளர் அசேல டி சில்வா மற்றும் மல்யுத்த வீரர் ஷனித் சதுரங்க ஆகியோர் கடந்த வாரம் காணாமல் போயிருந்தனர். இது தொடர்பில் இலங்கை அதிகாரிகள் இங்கிலாந்து பொலிஸில் முறையிட்டனர். எனினும் இதன் பின்னர், மேலும் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். வேலைவாய்ப்பைப் பெற அவர்கள் இங்கிலாந்தில் இருக்க விரும்புவதாக தாம் சந்தேகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 160 பேர் கொண்ட இலங்கைக் குழுவின் நிர்வாகம் அனைத்து உறுப்பினர்களின் கடவுச்சீட்டுகளையும் அவர்கள் வீடு திரும்புவதை உறுதிசெய்து வைத்திருந்தது. எனினும் அது சிலரை வெளியேறுவதைத் தடுக்கத் தவறியுள்ளது. காணாமல் போன முதல் மூவரை பிரித்தானிய பொலிசார் கண்டுபிடித்தனர், ஆனால் அவர்கள் உள்ளூர் சட்டங்களை மீறவில்லை மற்றும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருந்தமையால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.