25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சிறுத்தை உயிரிழந்தமைக்கு என்ன காரணம்? விசாரணைகள் ஆரம்பம்

நுவரெலியா ஹட்டன், டிக்கோயாவில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்றைய தினம் ஹட்டன் டிக்கோயா – சமர்ஹில் தோட்ட பகுதியில் உள்ள, மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த சிறுத்தை, காயத்துடன் வலையில் சிக்குண்ட நிலையில், மரமொன்றில் ஏறி தஞ்சமடைந்தது. சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர். சிறுத்தை தஞ்சமடைந்த மரத்தை வெட்டினர். இதன்போது சிறுத்தையின் மீது மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்தது. இவ்விடயம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து, உரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் குறித்த சிறுத்தைபுலி உயிரிழந்தது என உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகளுக்காக மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று ஹட்டன் டிக்கோயா சமர்ஹில் தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles